தமிழ் இணையக் கல்விக்கழகம், அயலகத் தமிழர்களுக்குத் தமிழ்க் கல்வி வழங்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது. இதில், 36 நாடுகளில் உள்ள 167 தொடர்பு மையங்கள் மூலம் இணையவழியாகச் சான்றிதழ்க் கல்வி முதல் இளநிலைத் தமிழியல் பட்டக் கல்வி வரை வழங்கி வருகின்றது. மேலும், தமிழ்ப் பரப்புரைக்கழகத்தின் கீழ் பின்வரும் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.
மேலும், மாணவர்கள், தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், தமிழார்வலர்கள் என அனைவருக்கும் பயன்படும் வகையில் தமிழ் மின்னூலகம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் சுமார் 95,00 நூல்கள், 8,02,000 ஓலைச்சுவடி பக்கங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இத்தளம் இதுவரை 6 கோடி பார்வைகளுக்கு மேல் பெற்றுள்ளது.
கணினித்தமிழுக்குத் தேவையான உரையாடி (Chatbot), மின்-அகராதி (e-dictionary), பிழைதிருத்தி (Spell checker), கல்வெட்டுப் படிப்பான் (Inscription Reader), முதலிய பல மென்பொருட்கள் பொது மக்களின் பயன்பாட்டிற்காக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
எனவே, அயலகத் தமிழர்களின் தமிழ்மொழி சார்ந்த தேவைகளைத் தமிழ் இணையக் கல்விக்கழகம் மேற்கண்ட முன்னெடுப்புகளின் மூலம் நிறைவு செய்து வருகிறது. இவற்றை www.tamilvu.org என்ற இணையதளம் மூலம் எவ்வித கட்டணமின்றி பயன்படுத்தலாம்.
தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் இந்த சேவைகள் அயலகம் மற்றும் வெளி மாநிலங்களில் வசிக்கும் தமிழர்களுக்கு வழங்கப்படவும், மேலும் அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் இதன் மூலம் பயன்பெறவும் tpktva@gmail.com அல்லது
+918667822210 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
For Queries, MAIL: tpktva@gmail.com
We use cookies to analyze website traffic and optimize your website experience. By accepting our use of cookies, your data will be aggregated with all other user data.